TOMATO PRICE : ஒரே நாளில் கிடு கிடுவென உயர்வு.! ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.? ஷாக்காகி நிற்கும் இல்லத்தரசிகள்

Published : Jun 25, 2025, 07:36 AM IST

தமிழகத்தில் காய்கறி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மழை, வெயில் மற்றும் வரத்து குறைவு போன்ற காரணங்களால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது, 

PREV
15
காய்கறிகளும் சமையலும்

சமையலுக்கு முக்கிய தேவையானது காய்கறிகளாகும், அந்த வகையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து குறைவு, மழை மற்றும் வெயில் மாறி மாறி வரும் கால நிலை மாற்றம் ஆகியவை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. 

அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்வால் இல்லத்தரசிகளின் மாதாந்திர பட்ஜெட் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மளிகைப் பொருட்களுடன் சேர்ந்து, காய்கறி விலையும் உயர்ந்ததால், ஒரு மாதத்திற்கு போதுமான பொருட்களை வாங்க முடியவில்லை என்று பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். விலை உயர்ந்த காய்கறிகளை தவிர்த்து, மலிவான மாற்று உணவுகளை சமைப்பதற்கு இல்லத்தரசிகள் நிர்பந்திக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

25
உயரும் காயிகளின் விலை

கடந்த சில மாதங்களாக பெய்த மழை மற்றும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளி உள்ளிட்ட பயிர்கள் பழுக்காமல் செடியிலேயே வெம்பிவிடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அண்டை மாநிலங்களில் மழை, கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் போன்றவை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைவு விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயம் தான் சமையலில் முக்கிய பங்காக உள்ளது. ஒரு கிலோ தக்காளி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது தக்காளி ஒரு கிலோ 25 முதல் 30 ரூபாயை தொட்டுள்ளது.

35
இலத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தக்காளி

வெங்காயத்தின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாக வெங்காயத்தின் விலை தற்போது ஒரு கிலோ 30 முதல் 50 ரூபாய் என தரத்தை பொறுத்து விற்பனையாகிவருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பை நிறைய தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி சென்ற மக்கள் குறைவான அளவே வாங்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சி காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. 

45
காய்கறி விலை என்ன.?

அந்த வகையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

55
தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், 

வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கும், வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது

Read more Photos on
click me!

Recommended Stories