tomato onion
தக்காளி, வெங்காயம்
சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தக்காளி மற்றும் வெங்காயமாகும், அந்த அளவிற்கு முக்கிய தேவையாக இந்த இரண்டு காய்கறிகளும் உள்ளது. மற்ற காய்கறிகளின் விலை உயர்ந்தாலும் இல்லத்தரசிகள் அவ்வளவு கவலையடையமாட்டார்கள். தக்காளி வெங்காயம் விலை உயர்ந்தால் அவ்வளவு தான் மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். ஏனென்றால் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் சமையல் செய்வது இயலாத காரியம். இந்த நிலையில் தான் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது போட்டி போட்டு கடந்த சில மாதங்களாக உயர்ந்தது.
TOMATO PRICE
தக்காளி விலை என்ன.?
தக்காளி ஒரு கிலோ 100 ரூபாயை தொட்டால் வெங்காயம் ஒரு கிலோ 120 ரூபாயை எட்டும். அந்த அளவிற்கு விலை உயர்வு இருந்து வந்தது. இதனால் கிலோ கணக்கில் வாங்கி சென்ற மக்கள் ஒரு கிலோ, அரைக்கிலோ என்ற அளவில் வாங்கி சென்றனர். தங்கத்தின் விலையை போல் நாளுக்கு நாள் விலை உயர்வால் மக்கள் கவலை அடைந்தனர். இதனையடுத்து தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்தது.
TOMATO PRICE TODAY
வெங்காயம் விலை என்ன.?
அதன் படி வெங்காயமானது பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்களின் மூலம் விற்பனைக்கு மத்திய அரசு அனுப்பியது. அந்த வகையில் மக்கள் அதிகளவு கூடும் பகுதியில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல மாநில அரசும் சென்னையில் உள்ள பன்னை பசுமை மையங்களில் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்தது. இருந்த போதும் குறைந்த விலையில் தக்காளி மற்றும் வெங்காயமானது அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்காத நிலை நீடித்தது.
tomato onion price
சரசரவென குறைந்த விலை
இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்திருந்த நிலையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை சரசர வென குறைய தொடங்கியது. அதன் படி ஒரு கிலோ தக்காளி கடந்த மாதம் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன் படி 6 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு கூவி கூவி விற்கப்படுகிறது. இதே போல வெங்காயத்தின் வரத்தும் அதிகரித்துள்ளதால் அதன் விலையும் குறைய தொடங்கியுள்ளது. தற்போது ஒரு கிலோ வெங்காயம் 25 முதல் 35 ரூபாயக்கு விற்பனையாகிறது.
Onion Price Today
கோயம்பேடு காய்கறி விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
vegetable price
காய்கறி விலை என்ன.?
பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
vegetable
இன்றைய காய்கறி விலை
பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது