காலையிலேயே பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! சனிக்கிழமை அதுவுமா இன்று பள்ளிகள் முழு நேரம் செயல்படும்.!

Published : Feb 14, 2026, 07:33 AM IST

School Working Day: திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த அக்டோபர் 22ம் தேதி புதன் கிழமை அன்று மழையின் காரணமாக உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.

PREV
15
பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டாலே பள்ளி மாணவர்கள் டிவி முன்னாடி அமர்ந்து கொண்டு விடுமுறை அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்த்து காத்து கிடப்பது வழக்கம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே அதாவது அக்டோபர் 15ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது.

25
வெளுத்து வாங்கிய கனமழை

இதனால் ஏரி, குளங்கள் மற்றும் நீர்நிலைகளின் நீர் மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

35
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மழையின் தீவிரத்தை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் தொடர்ந்து விடாமல் கனமழை வெளுத்து வாங்கியதால் அக்டோபர் 22ம் தேதி திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

45
இன்று பள்ளிகள் செயல்படும்

இந்நிலையில் அக்டோபர் 22ம் தேதி விடுமுறை ஈடுசெய்யும் விதமாக இன்று பள்ளிகள் முழு நேரம் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த அக்டோபர் 22ம் தேதி புதன் கிழமை அன்று மழையின் காரணமாக உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அவ்விடுமுறையினை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

55
பள்ளிகள் முழு நேரம் செயல்படும்

அதன்படி சனிக்கிழமையான இன்றைய தினம் அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளும் முழுவேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதன் கிழமை அட்டவணையை பின்பற்றி பள்ளி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories