Today Gold Rate in Chennai : சவரனுக்கு 120 ரூபாய் குறைந்த தங்க விலை.. அப்போ தங்கம் வாங்க இது சரியான நேரமா?

First Published | Nov 6, 2023, 11:01 AM IST

Today Gold Rate in Chennai : தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாவே பல ஏற்ற இறக்கங்களை தொடர்ச்சியாக கண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று சென்னை ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் 120 ரூபாய் குறைந்துள்ளது. 

Today Gold Rate

இன்று வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை (நவம்பர் 6) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 ரூபாயும் கிராமுக்கு 15 ரூபாயும் குறைந்துள்ளது. இதனையடுத்து தங்கம் விலை குறைந்து ஒரு சவரன் ரூ. 45600க்கும் மற்றும் ஒரு கிராம் ரூ. 5700க்கும் விற்பனையாகி வருகின்றது. மேலும் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை இன்று 1 கிராமிற்கு 6170க்கு விற்பனையாகிறது.

Silver Price Today

மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 78200க்கும் மற்றும் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 78.20க்கும் விற்பனையாகிறது. சென்ற வாரம் தங்கம் கிராமுக்கு 5715 ரூபாய் என்று இருந்த நிலையில் இன்று 15 ரூபாய் குறைந்து 5700க்கு விற்பனையாகிறது. 

Tap to resize

Gold Rate

தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடை வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மக்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்தி தங்கத்தை வாங்குவது சிறந்ததாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos

click me!