டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்களுக்கு முக்கிய செய்தி! வந்தது புதிய மாற்றம்!

Published : Apr 25, 2025, 09:43 AM IST

TNPSC தேர்வுகளில் பயன்படுத்தப்படும் OMR தாளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்தில் செய்யப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் OMR தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

PREV
14
டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்களுக்கு முக்கிய செய்தி! வந்தது புதிய மாற்றம்!
Tamil Nadu Public Service Commission

TNPSC New OMR Sheet Sample; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகிறது. குரூப் 4, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 1 மற்றும் தொழில்நுட்பத் தேர்வுகள் எனப் பல்வேறு வகையான  போட்டி தேர்வுகள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இவற்றில் பெரும்பாலான தேர்வுகள் ஓ.எம்.ஆர் (OMR) தாள் அடிப்படையில் வினாக்கள் அடங்கிய தேர்வாக நடைபெறுகிறது. 

24
TNPSC Exam

டிஎன்பிஎஸ்சி ஓஎம்ஆர் தாளில் புதிய மாற்றம்

இதில், அவ்வப்போது பல்வேறு புதிய நடைபெறுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், போட்டித் தேர்வுகளுக்கு பயன்படுத்தப்படும் ஓஎம்ஆர் தாளில் கடந்த ஜனவரி மாதம் மாற்றம் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான்லூயிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. புதிய ஓ.எம்.ஆர். விடைத்தாளின் மாதிரி படிவமானது OMR Answer Sheet - Sample" எனும் தலைப்பில் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

34
TNPSC New OMR Sheet Sample

தேர்வர்கள் 4 இலக்க வினாத்தொகுப்பு எண்ணை அதற்குரிய வட்டங்களில் கருமை நிற பந்துமுனை பேனாவை பயன்படுத்தி கருமையாக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஓ.எம்.ஆர் விடைத்தாளின் பக்கம் 1, பகுதி-2ல் தேர்வர்கள் உறுதிமொழி அளித்து கையொப்பமிட வேண்டும். 

44
TNPSC New OMR Sheet Sample 2025

இனி வரும் தேர்விற்கு புதிய ஓஎம்ஆர் தாள்

தேர்வாணையத்தால் நடத்தப்பட்டிருக்கும் இனிவரும் அனைத்து ஓ.எம்.ஆர். முறை தேர்வுகளிலும், பங்கேற்க உள்ள தேர்வர்கள், புதிய மாதிரி ஓ.எம்.ஆர். விடைத்தாளினை நன்கு பார்த்து அறிந்துக் கொண்டு தேர்வு எழுத வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான முதல் தேர்வாக குரூப் 1 தேர்வி வரும் ஜூன் 15-ம் தேதி நடைபெற உள்ளது. அத்தேர்வில் இருந்து புதிய OMR தாள் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read more Photos on
click me!

Recommended Stories