இன்றைய தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டு போடுங்க.! திமுகவை வீழ்த்த இபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்

Published : Apr 25, 2025, 09:09 AM IST

தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த அதிமுக புதிய கூட்டணி அமைத்துள்ள நிலையில், இன்று நடைபெறும் NLC தொழிற்சங்கத் தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளன.

PREV
16
 இன்றைய தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டு போடுங்க.! திமுகவை வீழ்த்த இபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்

NLC union election DMK AIADMK contest : தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்த அதிமுக களம் இறங்கு புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் இன்று தொழிற்சங்கங்களுக்கு இடையேயான தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க கார்ப்பரேஷன் (NLC) தொழிலாளர்கள் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் ( 25.4.2025) இன்று நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் ஆகியவற்றின் தொழிற்சங்க பரிவி தேர்தலில் களம் இறங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

26
DMK AIADMK contest

தொழிற்சங்க தேர்தல்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தேர்தலில், தற்போது அங்கீகாரம் பெற்று என்.எல்.சி. ஊழியர்களின் நலனுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் NLC அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் மீண்டும் அங்கீகாரம் பெறுவதற்காகப் போட்டியிடுகிறது. நம்முடைய தொழிற்சங்கத்தை எதிர்த்து வேறு சில இயக்கங்களும் போட்டியிடுகின்றன.

அதில் திமுக-வின் தொ.மு.ச-வும் ஒன்றாகும்.  வழக்கம்போல் பொய்களை விதைத்தே தொழிலாளர்களிடம் வாக்கு கேட்பது, இந்த ஏமாற்று மாடல் கட்சியின் வாடிக்கையான செயலை தோலுரித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது. 

36
Neyveli nlc Election

போட்டி போடும் திமுக- அதிமுக

2013-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில், அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ்-திமுக அரசு, என்.எல்.சி-யின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்தபோது, 27.8.2013 முதல் 13 நாட்கள் என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள்.

தொடர்ந்து, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்.எல்.சி-யின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவினை எதிர்த்து, டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.  கடிதம் எழுதியதுடன், அன்றைய மத்திய அரசை வலியுறுத்தி என்.எல்.சி-யின் 5 சதவீத பங்குகளை தமிழ் நாடு அரசுக்குச் சொந்தமான  தமிழக அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (TIDCO) மூலம் வாங்கினார்கள். 

46
NLC union election

என்எல்சி தனியாருக்கு தாரைவார்ப்பு

இதனைத் தொடர்ந்து, என்.எல்.சி. நிறுவனத் தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். என்.எல்.சி. நிறுவனம் தனியார் வசம் ஆகாமல் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தடுத்து நிறுத்திய காரணத்தினால்தான் இன்றைக்கும் அதன் ஊழியர்கள் இந்தியாவிலேயே எந்த பொதுத்துறை நிறுவனத்திலும் இல்லாதவாறு சிறப்பான ஊதியம் பெறுகிறார்கள்.  

என்.எல்.சி. தொழிலாளர்கள், NLC அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்திற்கு கடந்த தேர்தலில் அங்கீகாரம் வழங்கினார்கள். மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்க முற்பட்டபோது, திமுக அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 

56
NLC union election DMK AIADMK contest

ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை

ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் நிதர்சனம். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியோ, அவரது மகன் என்ற முறையில் இன்றைக்கு தலைவராக இருக்கக்கூடிய மு.க. ஸ்டாலினோ இந்தப் பங்கு விற்பனையை எதிர்த்து, மத்திய அரசைக் கண்டித்து அறிக்கை ஏதாவது வெளியிட்டிருந்தால், அதை வாக்குப் பதிவிற்கு முன்பு, பொது வெளியில் வைக்க திமுக தயாரா?

66
NLC ASSEMBLY

அதிமுகவிற்கு வாக்கு அளியுங்கள்

ஏச்சிப் பிழைக்கும் தொழிலையே மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்தும் நிர்வாகத் திறனற்ற  மு.க. ஸ்டாலினின் பசப்பு வார்த்தைகளிலும், அவர் ஆட்டும் கிளுகிளுப்பை சத்தங்களுக்கும் செவி சாய்க்காமல் என்.எல்.சி. தோழர்கள் அவர்களுக்கு என்றென்றும் பாதுகாப்பு அரணாக நிற்கும் NLC அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தை எண். 3-ல் வாக்களித்து தனிப்பெரும் சங்கமாக தேர்வு செய்திடுமாறு கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories