Ration: ரேஷன் கடைகள் டோட்டலா மாறுது.. இனி அரிசி, பருப்பு இப்படிதான் கிடைக்கும்.. தமிழக அரசு அப்டேட்!

Published : Jun 06, 2026, 11:47 AM ISTUpdated : Jun 06, 2026, 11:54 AM IST

Ration Shops: தமிழக பொதுமக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் ரேஷன் கடைகள் ஒரு அதிரடி மாற்றத்தை தவெக அரசு கொண்டு வர உள்ளது. இது தொடர்பனா முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
ரேஷன் கடைகள் மீது தொடர் புகார்கள்

தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகள் எனப்படும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நடுத்தர மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்களே வாழ்வாதாரமாக உள்ளது. ரேஷன் அரிசியில் கல், தவிடு, வண்டுகள் இருப்பது போன்ற புகார்கள் ஒருசில இடங்களில் இருந்து வருகின்றன.

இது மட்டுமின்றி துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் தரம் சில சமயங்களில் சரியாக இருப்பதில்லை எனவும் சில இடங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் சரியான எடையில் இல்லை எனவும் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு ரேஷன் கடைகளை நவீனமயமாக்கவும், பொதுமக்களுக்குத் தரமான பொருட்களை விநியோகிக்கவும் மிக முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

24
அரிசி, பருப்பு, சர்க்கரை இனி பாக்கெட்டுகளில்

இதன் ஒரு பகுதியாக, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோக முறையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள சில குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் சர்க்கரை மற்றும் துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் தனியாகப் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, சோதனை முறையில் விநியோகம் செய்யப்பட்டன. இந்தத் திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

34
தவெக அரசு வாக்குறுதி

இதனைத் தொடர்ந்து, இந்த நடைமுறையை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் மிக விரைவில் விரிவாக்கம் செய்யத் தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சர்க்கரை, துவரம் பருப்பு மட்டுமன்றி, ரேஷன் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையுமே பாதுகாப்பான முறையில் பாக்கெட்டுகளாக மாற்றி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக பேசிய தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், ''ரேஷன் கடைகளில் அரிசி, சக்கர்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பாக்கெட்கள் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். ரேஷன் பொருட்களை பாக்கெட் மூலம் விநியோகம் செய்தால் அளவு குறைத்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க முடியும்.

44
இனி கொள்முதலில் முறைகேடுகள் நடக்காது

இதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் போன்ற பொருட்களைக் கொள்முதல் செய்ததில், சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இத்தகைய முறைகேட்டு புகார்களுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தவெக அரசு மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதாவது இனி வரும் காலங்களில் ரேஷன் பொருட்களுக்கான கொள்முதல் ஒப்பந்தங்கள் அனைத்தும் ‘மின் டெண்டர்’ (E-Tender) எனப்படும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதன் மூலம், கொள்முதல் நடைமுறைகள் அனைத்தும் நூறு சதவீதம் வெளிப்படைத்தன்மையுடனும், விதிகளைப் பின்பற்றியும் மட்டுமே நடத்தப்படும் எனத் தமிழக உணவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் மேற்கொள்ளப்படும் அதிரடி நடவடிக்கை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories