திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் இந்த ரயில் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.
Tiruvannamalai Pournami Girivalam : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்கள் பல நாடுகளில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வந்து செல்வார்கள். அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் செல்வது மிகவும் பிரசித்து பெற்றது.
வேண்டிய காரியங்கள் நிறைவுபெற வேண்டி பக்தர்கள் கூடுவார்கள், அதிலும் பௌர்ணமி அன்று மிகவும் விஷேசமாகும். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு செல்வது வழக்கம்.
24
பௌர்ணமி கிரிவலம்
அதன் படி நாளை பௌர்ணமி தினத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கூடவுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இதே போல பௌர்ணமி கிரிவலத்தையொட்டி தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை (வருகின்ற மார்ச் 13ஆம் தேதி) விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலானது இயக்கப்பட உள்ளது.
34
சிறப்பு ரயில் அறிவிப்பு
இந்த சிறப்பு ரயிலானது (ரயில் எண் 06130/06129 ) 13 ஆம் தேதி காலை 9:25 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படுகிறது. அந்த ரயில் அன்றைய தினம் மதியம் 11.10 மணியளவில் திருவண்ணாமலையை சென்று சேருகிறது. இதே போல திருவண்ணாமலையிலிருந்து மதியம் 12:40 மணிக்கு புறப்படும் ரயிலானது அன்றைய தினம் மதியம் 2:15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடைகிறது.
44
விழுப்புரம் டூ திருவண்ணாமலை
இந்த சிறப்பு ரயிலில் 8 மெமு வகை ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பல்லபட்டு, அய்யனூர், திருக்கோவிலூர், தண்டறை வழியாக திருவண்ணாமலையை சென்று சேருகிறது. எனவே திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.