இந்த நிலையில் மாணவ /மாணவியர்களின் நலன் கருதியும். கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள ஒரு மாணவர் கூட விடுபடக்கூடாது என்ற நோக்கத்தோடும் 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் 15.03.2025 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கல்வி நிலைய முதல்வர்களும், கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட விபரத்தினை மாணாக்கர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள், அனைத்து மாணாக்கர்களும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.