Southern Railway: ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published : Jul 30, 2024, 11:28 AM IST

நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

PREV
13
 Southern Railway: ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Southern Railway

கோடை விடுமுறையில் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை அவ்வப்போது இயங்கி வருகிறது. அதேபோல், பண்டிகை நாட்கள், சிறப்பு விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

23
Tirunelveli to Mettupalayam Train

அந்த வகையில் நெல்லை டூ மேட்டுப்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் டூ நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலின் சேவையை கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரயில் பயணிகளின் வரவேற்பு மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை தற்போது மேலும் 3 மாதங்களுக்கு அதாவது அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

33
Special Train Services Extension

நெல்லையில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்படும் ( (06030) ரயிலானது அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, கோவை வழியாக மறுநாள் திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும். மறுமார்க்கம் திங்கட்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை வந்து சேரும். 

Read more Photos on
click me!

Recommended Stories