தமிழகத்தில் அரசு விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே விடுமுறை வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடானது திருச்செந்தூர் முருகன் கோவிலில் விசாகத் திருவிழா 10 நாள்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான ஜூன் 9ம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
24
வைகாசி விசாகம் திருவிழா
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26-ம் தேதி ஜூன் 9ம் தேதியான (நாளை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
34
உள்ளூர் விடுமுறை
இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
44
ஜூன் 14 வேலை நாளாக அறிவிப்பு
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 14ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.