12 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் எப்போது? தேதி, நேரம் அறிவிப்பு!

Published : Jun 07, 2025, 11:13 AM IST

300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்ற பெருந்திட்ட வளாகப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த குடமுழுக்கு விழா எப்போது என்ற அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

PREV
14
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

24
பெருந்திட்ட வளாகப் பணிகள்

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 6 நாட்கள் கோயில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து சூரசம்ஹார நிகழ்ச்சியைக் கண்டு விரதம் முடிப்பார்கள். இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் HCL நிறுவனம் சார்பில் 200 கோடியும், அறநிலையத்துறை சார்பில் 100 கோடி என மொத்தம் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வந்தன.

34
குடமுழுக்கு விழா

கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி துவங்கிய இந்த பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு எப்போது நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இக்கோவிலில் ஜுலை 7ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
கோயில் நிர்வாகம்

இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு விழா 2025 ஆம் ஆண்டு 01-07-2025 முதல் 07-07-2025 முடிய வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அதில் முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டு 07.07.2025 அன்று காலை 06.15 மணிக்கு மேல் 06.50 மணிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories