இனி பள்ளி மாணவர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published : Jun 07, 2025, 07:33 AM IST

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் சீருடை குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய விதிகளை அறிவித்துள்ளது. 

PREV
14
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என கூறப்பட்டு வந்தது. ஆனால், திடீரென தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியது மட்டுமல்லாமல் வெயிலும் குறைந்து காணப்பட்டது. இதனால் திட்டமிட்டப்படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

24
பள்ளிக்கல்விதுறை

இந்நிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்விதுறை பரபரப்பு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் அரசு அங்கீகரித்த சீருடையை மட்டுமே அணிய வேண்டும். இறுக்கமான, முக்கால் அளவுள்ள பேன்ட், இறுக்கமான மற்றும் முழுக்கை சட்டை உள்ளிட்டவற்றை அணியக்கூடாது. தலையில் அதிக முடி இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளது.

34
பொட்டு வைப்பதற்கு தடை

மேலும் கத்தி, கூர்மையான பொருள், சைக்கிள் செயின் போன்றவற்றை பள்ளிக்கு மாணவர்கள் எடுத்து வரக்கூடாது. பல வண்ணங்களில் பொட்டு வைப்பது, கை, கழுத்தில் வண்ணக்கயிறுகள் அணிவது, ஜாதி அடையாளங்களை குறிக்கும் பனியன் அணிவது, அடையாள ஸ்டிக்கர் ஒட்டிய சைக்கிள் எடுத்து வருவது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதேபோல் பல வண்ணப் ரிப்பன் கட்டுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. வேறுபாடுகளை உருவாக்கும் வகையிலான பேச்சு செயல்களில் ஈடுபடக்கூடாது. தூய்மையான உடையுடன் காலணியும் அணிய வேண்டும்.

44
பெற்றோருடன் வர வேண்டும்

குறிப்பாக மாணவர்களுக்கு விடுமுறை தேவைப்பட்டால், பெற்றோர் வாயிலாக ஆசிரியரிடம் தெரிவித்து விடுமுறை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மறுநாள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories