நெல்லை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்
2025ம் ஆண்டு புத்தாண்டு பிறந்து விட்ட நிலையில், இந்திய ரயில்வே புதிய கால அட்டவணை வெளியிட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி (நேற்று) முதல் தமிழ்நாட்டில் பல்வேறு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்களில் பயண நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
திருநெல்வேலி சென்னை இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12632) நெல்லையில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதே வேளையில் சென்னைக்கு வழக்கமான நேரத்தில் (காலை 7 மணி) சென்றடையும். பயண நேரம் 20 நிமிடம் குறைந்துள்ளது.
மறுமார்க்கமாக இதே ரயில் (வ.எண்:12631) இரவு 8.10 மணிக்கு பதில் இரவு 8.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு வழக்கமான நேரத்தில் (காலை 6.40 மணி) நெல்லை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.