பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் விடுமுறை! இந்த மாவட்டத்திற்கு மட்டும் பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்கள் லீவு?

First Published | Jan 2, 2025, 12:56 PM IST

School Holiday: 2025 பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17 வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்தால், 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். 

School Student

மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே அளவில்லாத சந்தோஷம் தான். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக போதும் போதும் என்ற அளவுக்கு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கொட்டி கிடந்தது. அதுவும் வடகிழக்கு பருவமழை மற்றும் அரையாண்டு விடுமுறை அடுத்தடுத்து கிடைத்ததால் மாணவர்கள் உற்சாகம் துள்ளி குதித்தனர். இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகைக்கு 9 முதல் 6 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளதால் இப்போதே குஷியில் உள்ளனர்.  

Tamilnadu Government

எப்படி என்றால் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 14 செவ்வாய்கிழமை தை பொங்கல், ஜனவரி 15 புதன் திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 வியாழன் உழவர் திருநாள் வருகிறது. அரசு மனசு வைத்தால் பள்ளி மாணவர்களுக்கும் 9 நாள் விடுமுறை கிடைக்கும். அதாவது பொங்கல் முந்தைய நாள் போகி பண்டிகை ஜனவரி 13ம் தேதி திங்கள் கிழமை வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகைக்கு தமிழக அரசு விடுமுறை அளித்து வருகிறது. ஆகையால் அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளது. 

Tap to resize

Pongal Festivel

அதேபோல் ஜனவரி 11, 12ம் தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை வந்து விடுகிறது. இடையில் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மறுநாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும். அப்படி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனிடையே ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கக் கோரி அரசு ஊழியர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

School Holiday

இந்நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் 10 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது ஜனவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் தமிழக அரசு 9 நாட்கள் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் இந்த மாவட்டத்திற்கு  கூடுதல் விடுமுறை கிடைக்க உள்ளது. 

Local Holiday

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:  ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா இந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 10ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, திருச்சி மாவட்டத்துக்கு ஜனவரி 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

School Leave

இந்த விடுமுறை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனினும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்டு வழக்கம்போல இயங்கும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 25-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!