தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்துார், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களில், அதிக அளவில், 'ஸ்க்ரப் டைபஸ்' பரவல் உள்ளதாகவும், விவசாயிகள், புதர் மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்போர், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணியர், பூச்சி கடிக்கு உள்ளாகும் சூழலில் இருப்போருக்கு, பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'எலிசா' ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் வாயிலாக, நோயை கண்டறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.