நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பேராலயத்திற்கு சொந்தமான ஜோசப் புதிய விடுதியில் கடந்த 29 ம் தேதி மாலை திருவாரூர் மாவட்டம் வலங்கைமான விருப்பாச்சிபுரம், பாதிரிபுரத்தைச் சேர்ந்த லோகநாதன், விஜயகுமாரி, கலியபெருமாள் ஆகிய மூவரும் அறை எடுத்து தங்கி உள்ளனர். கலியபெருமாளும், விஜயகுமாரியும் கணவன் மனைவி ஆவர். இந்நிலையில் அவர்கள் தங்கி இருந்த அறையின் ஜன்னலில் துண்டு முடிச்சி போட்டு தொங்கி இருந்ததை கண்ட பக்கத்து அறையில் உள்ளவர் சந்தேகமடைந்து விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர்.