இதுதான் லாஸ்ட் சான்ஸ்! குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published : Dec 08, 2024, 03:55 PM ISTUpdated : Dec 08, 2024, 04:08 PM IST

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் பதிவேற்றத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், டிசம்பர் 21 வரை சரிசெய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

PREV
16
இதுதான் லாஸ்ட் சான்ஸ்!  குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. இதில், குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு என பல நிலைகளில் தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

26
TNPSC Group 4 Exam

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 காலியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது.  இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர். 

இதையும் படிங்க: மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க போகும் கனமழை! இந்த முறை எந்தெந்த மாவட்டங்களில் சம்பவம் இருக்கு தெரியுமா?

36
Group 4 Exam

முதலில் 6,244 காலிப்பணியிடங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தேர்வர்களின் கோரிக்கையை அடுத்து 3 முறை அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9,491 காலி பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ம் தேதி வெளியானது. இதனையடுத்து ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வழிமுறைகள் வெளியிடப்பட்டது.  மேலும் சான்றிதழ் பதிவேற்றம் நவம்பர் 9 முதல் தொடங்கி 21ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் டிஎன்பிஎஸ்சி டிசம்பர் 21 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

46
TNPSC News

இதுதொடர்பாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 4 தேர்வு பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் சில விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இனி அரசு ஊழியர்கள் ஓடவும் முடியாது ஒளிவும் முடியாது! உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

56
TNPSC Group 4 2024

எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக டிசம்பர் 7 முதல் 21ம் தேதி இரவு இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அவ்விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

66
TNPSC Group 4

எனவே, அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு (OTR) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் கோரிக்கை (claim) விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories