3 லட்சம் கடன்.. 25 சதவிகிதம் மானியம்; தமிழக அரசின் அசத்தல் திட்டம்- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

Published : Dec 08, 2024, 02:19 PM IST

25 வகையான கைவினை தொழில்களுக்கு கடன் உதவி வழங்கப்படுதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழக அரசு  ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்குகிறது. 

PREV
15
3 லட்சம் கடன்.. 25 சதவிகிதம் மானியம்; தமிழக அரசின் அசத்தல் திட்டம்- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
small business loan

தமிழக அரசின் கடன் உதவி திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி சொந்த தொழிங்கும் வகையில் பல்வேறு கடன் உதவி திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் படி 10 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான சிறு வணிக கடன், கூட்டுறவு துறை பணியாளர்களுக்கு 20 லட்சம் வரை தனி நபர் கடன், வேலை இல்லாத இளைஞர்களுக்கு UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை மானியத்தில் கடன் வழங்கும் திட்டம், முதல்வர் மருந்தகம் அமைக்க 3 லட்சம் ரூபாய் மானியத்தில் கடன், பெண்கள் சுய தொழில் தொடங்க கடனுதவி என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

25
Artisan Craft Scheme

"கலைஞர் கைவினைத் திட்டம்"

இந்த வகையில் தற்போது கைவினைக் கலைசர்களுக்கு கடன் உதவி திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கைவினைக் கலைஞர்களைத் தொழில்முனைவோர்களாக உயர்த்திட "கலைஞர் கைவினைத் திட்டம்" தமிழக அறிவித்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  

சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் பல திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது. இந்த நிலையில் குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
loan for artisans

மானியத்தோடு கடன் உதவி திட்டம்

இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலைத் தொடங்குவதற்கும். செய்யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்திடவும் கடன் உதவிகளும், திறன்மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும். கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3.00 இலட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
 

45
loan scheme

கைவினை தொழில்கள்

இத்திட்டத்தின்கீழ் மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கட்டட வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல், பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள். மீன் வலை தயாரித்தல், தையல் வேலை. நகைசெய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை. துணி வெளுத்தல் தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், 
 

55
Artisan Craft Scheme

விண்ணப்பிக்க அழைப்பு

துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், பாசிமணி வேலைப்பாடுகள். மூங்கில், சணல், பனை ஓலை. பிரம்பு வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள். சுதை வேலைப்பாடுகள். பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும். ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 10,000 கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.tn.gov.in இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்களை மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர்கள் தலைமையில் உள்ள குழு சரிபார்த்து, வங்கிகளுக்குப் பரிந்துரைக்கும் என கூறப்பட்டுள்ளது. 
 

click me!

Recommended Stories