நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை ஆட்சியரையும், நீதிமன்றம் சொல்லியும் 144 தடை உத்தரவை ரத்து செய்யாத மதுரை துணை ஆணையரையும் மன்னிக்கவே முடியாது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியிருந்தார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இரண்டு முறை உத்தரவிட்டிருந்தார். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது. தனி நீதிபதியின் உத்தரவு சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் என அரசு தெரிவித்து இருந்தது.
24
நீதிமன்ற அவமதிப்பு
மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை காவல் ஆணையர் லோக நாதன், மதுரை காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கூறி இவர்கள் அனைவரையும் நேரில் ஆஜராக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி கடந்த மாதம் 9ம் தேதி இவர்கள் 3 பேரும் ஆஜரானார்கள்.
மன்னிக்கவே முடியாது
அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை ஆட்சியரையும், நீதிமன்றம் சொல்லியும் 144 தடை உத்தரவை ரத்து செய்யாத மதுரை துணை ஆணையரையும் மன்னிக்கவே முடியாது என்று கூறி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாது குறித்து ஏன் என்பது குறித்து எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
34
எந்த உள்நோக்கமும் இல்லை
இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை காவல் ஆணையர் லோக நாதன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரான நிலையில், இருவரும் தங்களது விளக்கத்தை தாக்கல் செய்தனர். அப்போது மதுரை ஆட்சியர் தரப்பில் 'நீதிமன்ற உத்தரவை மதிக்கக் கூடாது என்றோ, அதை நிறைவேற்றக் கூடாது என்றோ தனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை.
அப்போதைய சட்டம் ஒழுங்கு மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதக்கலவரம் ஏற்படும் சூழல் வருவதாக தனக்கு தகவல் வந்தது. ஒரே நேரத்தில் 1,500 பேர் மலை மீது ஏற முயன்றதால் கலவரம் ஏற்படும் சூழல் உருவானதால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என நீதிமனாறம் கருதினால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்' என்று கூறப்பட்டது. மதுரை காவல் ஆணையர் தரப்பிலும் இதே காரணங்களை கூறி விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.