விஜய்க்கு மட்டும் கருணை காட்டும் தமிழக போலீஸ்..? திமுக.வுடன் தவெக அண்டர் டீலிங்..? பகீர் கிளப்பும் திருமா

Published : Oct 02, 2025, 12:43 PM IST

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தமிழக காவல்துறை கட்சியின் தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

PREV
14
தவெக நிர்வாகிகள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் ஏற்பட்டு 5 நாட்களாகிறது. தற்போது வரை கட்சியின் தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், மாவட்ட நிர்வாகிகள் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யவில்லை. விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசுக்கு பயமா? ஒன்று விஜய் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். இல்லையென்றால் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யுங்கள்.

24
தமிழக காவல்துறைக்கு அச்சம்

கரூர் சம்பவத்தில் தமிழக காவல்துறை காட்டும் மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. விஜய் மீது வழக்குப்பதிவு செய்யததைப் பார்த்தால் அவருக்கும் திமுகவுக்கும் அண்டர் டீலிங் உள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து திமுக வெறுப்பு, திமுக அரசு மீதான வெறுப்பு, திமுக குடும்பத்தினர் மீதான வெறுப்பை மட்டும் பேசும் விஜய் ஒருநாளாவது தங்கள் கொள்கைத் தலைவர்களான பெரியா, அண்ணா உள்ளிட்டோர் பற்றி ஒரு வார்த்தையாவது பேசியுள்ளாரா?

34
பாஜக கூட்டணியில் விஜய்..?

பாஜக, அதிமுக கூட்டணியில் விஜய்யை கொண்டுவருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் திமுக.வுக்கு கிடைக்கக்கூடிய கிறிஸ்தவர்கள், சிறுபாண்மையினர் வாக்குகளை பிரிப்பதற்காகவே விஜய் களம் இறக்கப்பட்டுள்ளார். திமுக.வுக்கு கிடைக்கும் வாக்குகளை பிரித்துவிட்டால் எளிதில் வெற்றிபெறலாம் என பாஜக நினைக்கிறது.

44
அவதூறு பரப்பவே எம்பி.கள் குழு..?

தமிழக அரசு மீது அவதூறு பரப்ப வேண்டும் என்பதற்காகவே பாஜக எம்பிகள் குழுவை தமிழகத்திற்கு அனுப்பி உள்ளது. இதனை முறியடிக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் உடனடியாக ஒரு குழுவை அமைத்து முறையன விசாரணை நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories