தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது.! பொதுமக்களுக்கு வெளியான குட்நியூஸ்.. இதுதான் காரணமா?

Published : Mar 02, 2026, 08:39 AM IST

Power Cut: தமிழகத்தில் இனி இரண்டு மாதங்களுக்கு பகலில் மின்தடை இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

PREV
14
பராமரிப்பு காரணமாக மின்தடை

தமிழகத்தில் மழை மற்றும் குளிர் காலம் முடிந்து வெயில் இப்போதே சுட்டெரித்து வருகிறது. இதனால் ஃபேன் மற்றும் ஏசி உள்ளிட்ட பயன்பாடு அதிகரித்ததை அடுத்து மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.

24
தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு

இந்நிலையில் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் இரண்டு மாதங்களுக்கு இனி மின்தடை இருக்கக்கூடாது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNPDCL) ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

34
பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு

அதில், பள்ளி மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் தடையற்ற மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நேரத்தில் பராமரிப்புக்கான மின்தடை மேற்கொள்ளக் கூடாது. மாணவர்கள் படிப்பதற்கு தடையில்லாத வகையில் இரவு நேரங்களிலும் மின்தடை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்த உத்தரவு இரண்டு மாதங்கள் அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.

44
அவசர காலப் பணிகள்

மிக முக்கியமான பழுதுகள் அல்லது தவிர்க்க முடியாத அவசர கால மின் பராமரிப்பு தேவைப்பட்டால் மட்டுமே, உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் மிகக் குறைந்த நேரத்தில் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories