Rohit Sharma Rain
சென்னையில் மழை பெய்யுமா.?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழையானது பெய்து வருகிறது. குறிப்பாக மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை பொறுத்த வரைக்கும் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சென்னையில் இன்று நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது மட்டுமில்லாமல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
rain alerts
இரவு நேரத்தில் தொடரும் மழை
ஏற்கனவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற பயிற்சி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று நடைபெற்றுள்ள போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி இருந்தது. இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியை கான உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர், ஆனால் சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக இன்றைய போட்டி நடைபெறுமா அல்லது மழை குறுக்கிடுமா என்ற கேள்வி எழுந்திருந்தது.
heavy rain
13 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
இந்த நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Cricketers
சென்னையில் ஒரு சில இடங்களில் மழை
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,
AUSTRALIA
கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு இல்லை
ஆனால் நகரின் உள் பகுதியான அண்ணாநகர், அம்பத்தூர் போன்ற இடங்களில் மழை பெய்யும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அப்படியே மழை பெய்தாலும் 10 நிமிடங்கள் மட்டுமே பெய்யும் எனவும் கூறியுள்ளார். எனவே இன்றைய கிரிக்கெட் போட்டிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
உலகக் கோப்பைக்கு மெட்ரோவில் இலவச பயணம்: ஆனால், இது கண்டிப்பா இருக்கணும்?