தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை..! எந்த மாவட்டங்கள்.? எப்போ தெரியுமா.? வானிலை மையம் தகவல்

Published : Oct 06, 2023, 04:19 PM IST

தமிழகத்தில் கோவை, ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வருகிற 8 ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.   

PREV
15
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை..! எந்த மாவட்டங்கள்.? எப்போ தெரியுமா.?  வானிலை மையம் தகவல்

மழைக்கு காரணம் என்ன.?

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று  மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

25

13 மாவட்டங்களில் கன மழை

08.10.2023 மற்றும் 09.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலைப்பகுதிகள்,  நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

35

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

45

 பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

செங்கம் (திருவண்ணாமலை) 10, காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), RSCL வல்லம் (விழுப்புரம்) தலா 6, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 5, 

55
rain alert

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்:  

06.10.2023: குமரிக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories