வீட்டுக்கே மதுபானம் டெலிவரியா.? டெட்ரா பாக்கெட் அறிமுகமா.? டாஸ்மாக் நிர்வாகம் என்ன சொல்லியிருக்கு தெரியுமா?

First Published | Jul 17, 2024, 12:40 PM IST

ஸ்விகி, பிக் பாஸ்கட், ஜொமெட்டோ, பிளிங்இட் தளங்கள் மூலம் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிடவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

வீடுகளை தேடி மதுபானம்

டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் வீட்டிற்கே நேரடியாக மதுபானங்களை டெலிவரி செய்வதை அனுமதிக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியானது. ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் மதுபானங்களை டெலிவரி செய்யும் நடைமுறை இருக்கும் நிலையில், அதை மற்ற மாநிலங்களிலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

liquor party

ஆன்லைன் மூலம் விநியோகம்.?

சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு  திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

Ramadoss : ஆன்லைன் மூலம் வீடுகளுக்கே மது விற்பனையா.? தமிழக அரசு ஆலோசனையா.!! எதிர்த்து நிற்கும் ராமதாஸ்

Tap to resize

liquor sale Karnataka

எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள்

வீடு தேடி மதுபான திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக போதை குறைந்த  மது வீடுகளுக்கே நேரடியாக வினியோகிக்கபட்டால், அது வீடுகளில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும் சுவைத்துப் பார்க்கத் தூண்டும். காலப்போக்கில்  வீட்டில் உள்ள பெண்களையும், பிள்ளைகளையும்  மதுவுக்கு அடிமையாகும் நிலை ஏற்படும் என கூறப்பட்டது. 

மறுப்பு தெரிவித்த டாஸ்மாக்

இந்த நிலையில், மதுபானம் ஹோம் டெலிவரிக்கு டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, எந்த புதிய முயற்சியிலும் டாஸ்மாக் இறங்கும் திட்டம் இல்லை என்றும், டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடவில்லை எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tomato: ஒரே நாளில் கிடு,கிடுவென உயர்ந்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.?திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
 

Latest Videos

click me!