குடும்பத்துடன் சுற்றுலா
நவீன காலத்திற்கு ஏற்ப மக்களும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் குடும்பத்தோடு நேரம் செலவழிக்க கூட முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில் எப்போதாவது நேரம் கிடைத்தால் நண்பர்கள் அல்லது குடும்பத்தோடு சுற்றுலாவிற்கு புறப்படுவார்கள். சுற்றுலாவும் ஆன்மிக சுற்றுலா அல்லது குளுமையான அல்லது இயற்கையே தேடி செல்வார்கள்.
அந்த வகையில் தமிழகத்தில் ஊட்டி,கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு போன்ற மலைவாசஸ்தளங்களும், நீர் நிலை சார்ந்த சுற்றுலா என்று பார்க்கும் போது குற்றாலம், தேனி, ஒக்கேனக்கல் என செல்வார்கள். இதுவே ஆன்மிக சுற்றுலா என்றால் தமிழகத்தில் மட்டுமே ஆயிரக்கணக்கான முக்கியம் மற்றும் பிரபலமான கோயில்கள் உள்ளது.