பாஜக ஆதரவு மாஜி அதிமுக அமைச்சரை சுற்றி வளைத்த அமலாக்கத்துறை- காரணம் என்ன.?

First Published | Oct 23, 2024, 7:56 AM IST

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். .

vaithiyalingam

வைத்தியலிங்கம் மீது புகார்

அதிமுகவில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்தியலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான உள்ளார்., தற்போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார்.  கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது சென்னை பெருங்களத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு 27 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது 2 மகன்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்ததனர். 

vaithilingam

கட்டிட்டம் கட்ட அனுமதி

குறிப்பாக பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 2013ஆம் ஆண்டில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக அனுமதி வழங்கபடாமல் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டில்  ஸ்ரீராம் குழுமத்துக்கு திடீரென அனுமதி வழங்கப்பட்டது. எனவே அப்போது அமைச்சராக இருந்த வைத்தியலிங்கத்துக்கு பல கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் கூறியது.

Tap to resize

ed raid

அமலாக்கத்துறை திடீர் சோதனை

வைத்தியலங்கத்தின் மகன்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனத்திற்கு லஞ்சமாக கை மாறியதாகவும், ஆனால் அந்த பணம் கடனாக பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை திடீர் சோதனையை தொடங்கியுள்ளனர்.  

சென்னை எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறைகள் மற்றும் ஒரத்தநாட்டில் உள்ள வீடு மற்றும் அவருக்கு சொந்த மான இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஜி அமைச்சர் வைத்தியலிங்கம் தற்போது பாஜகவிற்கு ஆதரவாக உள்ள ஓ.பன்னீர் செல்வத்தோடு நெருக்கமாக உள்ள நிலையில் தற்போது நடைபெறும் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos

click me!