பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் எல்லாம் இனி ஈஸி.! பள்ளிக்கல்வித்துறை சூப்பர் முடிவு

தமிழக அரசு மாணவர்களின் கற்றல் சுமையைக் குறைக்க தமிழ் பாடத்திட்டத்தை குறைக்கிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 40% பாடத்திட்டம் குறைக்கப்பட்டு, ஜூன் மாதம் புதிய புத்தகம் கிடைக்கும்.

The Tamil curriculum for school students is being reduced by 40 percent KAK

School Student Tamil syllabus reduction கல்வி தான் மாணவர்களின் வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. கல்வி தான் ஒரு மாணவனை நல்வழிப்படுத்துகிறது. கல்வி இல்லாத மனிதன் முழு மனிதனே இல்லையென் கூறுவார்கள். எனவே அந்த கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இதன் படி, மாணவர்களுக்கு பாடங்கள் எளிமையாக புரியும் வகையில் நிபுணர்களை கொண்டு பாட திட்டங்கள் அமைக்கப்படுகிறது. அதன் படி தமிழக அரசின் கல்வி திட்டங்கள் மாணவர்களின் படிப்பிற்கு பெரிதும் உதவியாக உள்ளது. 

The Tamil curriculum for school students is being reduced by 40 percent KAK
school student

மாணவர்களுக்காக தமிழக அரசின் திட்டங்கள்

மேலும் ஏழ்மையின் காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் இடை நிற்றலை குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறுத. காலை மற்றும் மதிய உணவு திட்டம், மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டை, கல்வி உதவி தொகை, இலவச சீருடை, இலவச மிதிவண்டி உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் பள்ளிகளில் அதிகளவிலான பாடங்களால் மாணவர்கள் படிப்பது மிகவும் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.


கூடுதல் பாடங்கள்- மாணவர்கள் சிரமம்

இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்கும் வகையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பாடதிட்டங்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் பாட புத்தகத்தின் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. தமிழ் பாடங்களில் உள்ள 40 சதவிகித அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் எனவும்,

Tamil curriculum for school students

குறைக்கப்படுகிறது தமிழ் பாடங்கள்

10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு முறையே 238, 236, 228 பக்கங்களைக் கொண்ட தமிழ் பாட புத்தகம் உள்ளதால் மாணவர்கள் முழு பாடத்திட்டங்களையும் படிப்பதற்கு சிரமப்படுவதால் பாடத்திட்டம் குறைக்கப்படுவுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் வரும் ஜூன் மாதம் குறைக்கப்பட்ட புதிய தமிழ் பாட புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என பாடநூல் கழக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 

Latest Videos

vuukle one pixel image
click me!