கோகுலம் சிட்பண்ட் நிறுவன சோதனையில் சிக்கியது என்ன? அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்!
எம்புரான் திரைப்படம் 200 கோடி வசூலித்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான கோகுலம் சிட்பண்ட்ஸில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
எம்புரான் திரைப்படம் 200 கோடி வசூலித்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான கோகுலம் சிட்பண்ட்ஸில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
எம்புரான் திரைப்படம்
எல்2 எம்புரான் திரைப்படம் மார்ச் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிருத்விராஜ்-மோகன்லால் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் மிக விரைவாக 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. இந்த திரைப்படத்தில் முல்லை பெரியாறு தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது சர்ச்சையானதை அடுத்து 24 காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு மறு தணிகை செய்யப்பட்டு நேற்று முன்தினம் முதல் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் கேரளா மட்டுமல்ல தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் சோதனை
இந்நிலையில் எம்புரான் படத்தை தயாரித்த கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் நேற்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சென்னை, கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'எல்2 எம்புரான்' பட இயக்குனர் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.1.50 கோடி பறிமுதல்
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.1.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை சம்மன்
எம்புரான் படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனுக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்திய நிலையில், படத்தின் இயக்குனரும் நடிகருமான பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.