Vegetables : கிடு,கிடுவென உயர்ந்த தக்காளி, முருங்கைக்காய் விலை.! ஒரு கிலோ பீன்ஸ், இஞ்சி விலை என்ன தெரியுமா.?

First Published | Jun 20, 2024, 8:42 AM IST

மழை மற்றும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விற்பனை விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. தக்காளி, இஞ்சி, அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தக்காளி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலையானது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 75 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Dindigul Accident: சரக்கு அடிச்சிட்டு வண்டி ஓட்டுனியா? ஓட்டுநரின் பதிலை கேட்டு ஷாக்கான பணியாளர்கள்
 

அவரைக்காய் விலை என்ன.?

அவரைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 1 கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


சின்ன வெங்காயம் விலை என்ன.?

பாகற்காய் ஒரு கிலோ60 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று 6 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாங்காய் விலை என்ன.?

சௌசௌ ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 160 க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 35 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் குடைமிளகாய்  ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பூண்டு ஒரு கிலோ 320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Agri University: வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; 4 மாணவிகள் முழு மதிப்பெண் பெற்று அசத்தல்

Latest Videos

click me!