tomato onion
சமையலும் தக்காளி வெங்காயமும்
சமையலுக்கு முக்கிய தேவையானது காய்கறிகளாகும், அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயம் முக்கிய இடம் பிடிக்கும், மற்ற காய்கறிகளின் பயன்பாட்டை விட இந்த தக்காளி மற்றும் வெங்காயம் தான் அதிக தேவையாக உள்ளது. அதன் படி இந்த இரண்டு காய்கறிகளின் விலை உயர்ந்தால் இல்லத்தரசிகளின் நிலை அவ்வளவு தான். ஆனால் கடந்த சில நாட்களாகவே இந்த இரண்டு காய்கறிகளும் கடுமையாக விலை உயர்வை சந்தித்துள்ளது. வெங்காயத்தின் விலை மட்டும் குறையாமல் உள்ளது.
tomato
தொட்டால் ஷாக் அடிக்கும் வெங்காயம் விலை
வெங்காயத்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் அதிகளவு வெங்காயம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒரு கிலோ வெங்காயம் 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
விலை உயர்வு காரணமாக மக்கள் பெரும் சிரமம் அடைந்த நிலையில் மத்திய அரசு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. பல மாநிலங்களுக்கு ரயில்களின் மூலம் வெங்காயம் டன் கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டது.
onion
வெங்காய விலை குறைய வாய்ப்பு
பொதுமக்கள் கூடும் பகுதியில் ஒரு கிலோ 35 ரூபாய் என லாரிகளின் மூலம் விற்பனை செய்யப்பட்டது. இருந்த போதும் இந்த வெங்காயம் பரவலாக அனைத்து மக்களுக்கும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. மேலும் மழை பாதிப்பு காரணமாக வெங்காயம் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
இதனால் வெங்காயம் வரத்து குறைந்ததையடுத்து வெங்காயம் விலை உச்சத்தை தொட்டது. அதே நேரத்தில் காரிப் வெங்காயம் விரைவில் வரும் எதிர்பார்க்கப்படுவதால் வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை குறையும் என கூறப்படுகிறது.
tomato price
போட்டி போட்டு உயரும் தக்காளி விலை
மேலும் தக்காளியின் விலை தற்போது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி வரத்து காய்கறி சந்தைக்கு குறைவான அளவே வருகிறது. இதனையடுத்து வெங்காயத்தோடு போட்டி போட்டு தக்காளி விலை உயர்ந்துள்ளது. மழை மற்றும் பனியின் காரணமாகவே செடிகளிலையே தக்காளி அழுகிவிடுகிறது.
மேலும் 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே மொத்த சந்தையில் ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சில்லரை கடைகளில் 100 ரூபாயை தாண்டும் என கூறப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Vegetable
காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ65 முதல் 80 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
vegetable price hike
பச்சை காய்கறி விலை என்ன.?
குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
koyambedu market
கோயம்பேட்டில் காய்கறி விலை
கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 140க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது