ஃபெஞ்சல் புயல்! மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு! எந்தெந்த மாவட்ட மக்களுக்கு தெரியுமா?

Published : Nov 30, 2024, 06:35 PM ISTUpdated : Nov 30, 2024, 06:50 PM IST

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

PREV
14
ஃபெஞ்சல் புயல்! மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு! எந்தெந்த மாவட்ட மக்களுக்கு தெரியுமா?
Cyclone Fengal

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு வடகிழக்கே 80 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்தில் 50 கி.மீ. தொலைவில்  நிலைக்கொண்டுள்ளது. காலையில் காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் தற்போது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக  தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதல் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

24
Minister senthil balaji

இதுதொடர்பாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழ்நாட்டில் வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை பெய்து வருகிறது.

34
Tamilnadu Electricity Board

இந்த புயல் காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. 

44
TNEB Bill

இந்நிலையில், மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் டிசம்பர் 10ம் தேதி வரை செலுத்த காலநீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories