Fengal Cyclone
தமிழகம் மற்றும் புதுச்சேரியை மிரள வைக்கும் ஃபெஞ்சல் புயல் நேரத்திற்கு நேரம் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இந்த புயலானது காரைக்கால் - மாமல்லபுரம் இடையே இன்று மாலை கரையை கடக்கும் என முதலில் கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஃபெஞ்சல் புயல் வேகம் குறைந்ததால் கரையை கடக்க தொடர்ந்து தாமதமாக ஏற்படுவதாகவும், ஆகையால் நாளை அதிகாலை கரையை கடக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் பாலச்சந்திரன் ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
Balachandran
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு வடகிழக்கே 100 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 100 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் இன்று மாலை காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளார்.
Tamilnadu Heavy Rain
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
Chennai Rains
அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. நாளை கடலூர், புதுவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Fengal Cyclone News
இன்று புயல் கரையை கடக்கின்ற பொழுது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் அவ்வப்போது இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ., நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் 10 செ.மீ., மாமல்லபுரத்தில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.