School Education Department
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கு வருகிற 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 வரை 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறுகிறது.
Half Yearly Exam
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணை:
அதன்படி, 6 முதல் 9ம் வகுப்பு வரைக்கும் 9ம் தேதி (திங்கள் கிழமை) தமிழ், 10ம் தேதி (செவ்வாய்க்கிழமை) விருப்ப மொழி, 12ம் தேதி (வியாழக்கிழமை) ஆங்கிலம், 16ம் தேதி (திங்கட்கிழமை) கணிதம், 18ம் தேதி (புதன்கிழமை) உடற்கல்வி, 20ம் தேதி (வெள்ளிக்கிழமை) அறிவியல், 23ம் தேதி (திங்கட்கிழமை) சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளது. இதில் 6ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 8ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், 9ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும்.
Half Yearly Exam Time Table
10ம் வகுப்பு அட்டவணை
10ம் வகுப்புக்கு 10ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ், 11ம் தேதி (புதன்கிழமை) விருப்ப மொழி, 12ம் தேதி ஆங்கிலம், 16ம் தேதி கணிதம், 19ம் தேதி(வியாழக்கிழமை) அறிவியல், 23ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
11th Class Student Exam Time Table
11ம் வகுப்பு அட்டவணை:
பிளஸ்-1 வகுப்புக்கு 9ம் தேதி தமிழ், 10ம் தேதி ஆங்கிலம், 12ம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்) ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழிற்கல்வி), பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், 16ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம். 18ம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல், 20ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள், 23ம் தேதி கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை வேளாண் அறிவியல், ஜெண்ட்ரல் நர்சிங்
12th Class Student Exam Time Table
12ம் வகுப்பு அட்டவணை:
12ம் வகுப்புக்கு 9ம் தேதி தமிழ், 10ம் தேதி ஆங்கிலம், 12ம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்), ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழிற்கல்வி), பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட பாடங்கள். 16ம் தேதி கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை வேளாண் அறிவியல், ஜெண்ட்ரல் நர்சிங்.
Half Yearly Exam News
18ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பேசிக் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம். 20ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல், 23ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்கள் தேர்வும் நடக்க உள்ளது. இந்த தேர்வுகள் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது.
Half Yearly Exam School Student
டிசம்பர் 24 செவ்வாய் முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கி ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மொத்தம் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடக்கிறது. இதில், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது.