கொட்டிக்கிடக்கும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ என்ன விலை தெரியுமா.?

First Published Oct 25, 2024, 8:59 AM IST

தொடர் மழை காரணமாக உச்சத்தில் இருந்து தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது தற்போது சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் வரும் நாட்களில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காய்கறிகளின் விலை என்ன.?

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறி விலையானது கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வருகிறது. கர்நாடாக, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கன மழையின் காரணமாக காய்கறி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்ததையடுத்து விற்பனை விலையானது உயர்ந்தது.

குறிப்பாக சமையலுக்கு தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரித்தது. ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் சிரமம் அடைந்தனர். கிலோ கணக்கில் தக்காளி மற்றும் வெங்காயம் வாங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ அல்லது அரை கிலோ என விற்பனையானது நடைபெற்றது.

விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

மேலும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வால் வீடு மற்றும் ஓட்டல்களில் அதனை சார்ந்த உணவு தயாரிப்பதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக முக்கிய காய்கறிகளான வெங்காயம் மற்றும் தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு மத்திய அரசு சார்பாக பல்வேறு மாநிலங்களில் முக்கிய இடங்களில் லாரிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டது. தமிழக அரசை பொறுத்தவரை சென்னையில் உள்ள பண்ணை பசுமை மையங்களில் ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கும், தக்காளி 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஓரளவு மக்கள் நிம்மதி அடைந்தனர். 

Latest Videos


Vegetables Price Koyembedu

சற்று குறைந்த காய்கறி விலை

இந்தநிலையில் தற்போது காய்கறிகளின் விலை குறைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் இரண்டு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. .

Vegetables Price Today

விலை நிலவரம் என்ன.?

நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்கால் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

vegetables

மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு

கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒன்று  20 முதல் 30  ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பீன்ஸ் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20-க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் வரும் நாட்களில் மழை பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புளதால் காய்கறி விலை மீண்டும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

click me!