மகிழ்ச்சியில் மிதக்கும் ஆசிரியர்கள்.! மறக்க முடியாத கிப்ட் கொடுத்த தமிழக அரசு

First Published | Oct 25, 2024, 7:48 AM IST

தமிழக அரசு சார்பாக கல்வித்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசை வழங்கியுள்ளது. 

கனவு ஆசிரியர் திட்டம்

தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதிய, புதிய திட்டங்களை நாள்தோறும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் நவீன காலத்திற்கு ஏற்ப பாட திட்டங்களும் மாற்றப்படுகிறது. எதிர்காலத்திற்கு தேவையான பாடத்திட்டங்களை வழங்கி வருகிறது. சிறந்த மாணவர்களுக்கு பல்வேறு பரிசுகளும் வழங்கப்படுகிறது.

மேலும் மாணவர்களை வெளிநாட்டிற்கு சுற்றுலாவும் அழைத்து செல்லப்பட்டனர். அந்த வகையில் சிறந்த மாணவர்களை ஊக்குவித்தும் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது.  அந்த வகையில் கனவு ஆசியர் திட்டமானது தமிழக அரசு தொடங்கியுள்ளது.

ஆசிரியர்களுக்கான போட்டி

இந்த திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 18ஆயிரம் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதில் ஆன்லைன் மற்றும் நேரடியாக தேர்வு நடத்தப்பட்டது. இதில் 2008 ஆசிரியர்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்வானார்கள். அப்போது ஆசிரியர்களிடம் கற்பித்தலின் நோக்கம், கற்பித்தலின் நவீன புதுமையான உத்திகள், கற்பித்தலுக்கு திட்டமிடல் போன்ற வினாக்கள் அடைப்படையில் கேள்வி கேட்கப்பட்டது. இதில் சிறப்பான பதில் அளித்த 992 ஆசிரியர்கள் 3 ஆம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் தேர்வில் ஆசிரியர்களுடைய பேச்சாற்றல், பாடப்பொருள் சார்ந்த அறிவினை, கற்பித்தல் நுட்பங்கள்தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில் இறுதியாக 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர்களாக தேர்வானார்கள். 

Latest Videos


ஆசிரியர்களுக்கு வெளிநாடு சுற்றுலா

இவர்களுக்கு தமிழக அரசு சார்பாக விருதும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் இந்த தேர்வில் 75 சதவிகித மதிப்பெண் பெற்றவர்கள் உள்நாட்டிற்குள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதில் 90 % மதிப்பெண் பெற்ற 55 ஆசிரியர்கள் நேற்று முன்தினம் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். 34 தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் 22 உயர்நிலை மேல்நிலை பள்ளி என 54 ஆசிரியர்கள் தற்போது பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து வருகின்றனர். ஆசிரியர்களோடு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்றுள்ளார்.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என முழங்கிய பிரெஞ்சுப் புரட்சியின் நினைவாக கட்டப்பட்ட ஈஃபிள் கோபுரத்தை ஆசிரியர்கள் பார்வையிட்டனர். அவர்களோடு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் கலந்து கொண்டார். 

மறக்க முடியாத நினைவுக்கு நன்றி

அப்போது ஆசிரியர்கள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்துள்ளீர்கள் என நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து  தங்குமிடம் சூப்பராக இருப்பதாகவும், உணவும் இந்திய உணவு கிடைப்பதாக மகிழ்ச்சியாக தெரிவித்தனர். பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுபயணம் சென்றுள்ள ஆசிரியர்கள் வருகிற 28ஆம் தேதி வரை பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்கவுள்ளனர். 
 

click me!