JOB
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
தமிழக அரசு சார்பாக வேலைவாய்ப்புக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பணிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக தேர்வு நடத்தி பணியாளர் தேர்வு செய்து வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பாகவே இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசு தேர்வுக்கும் தமிழக இளைஞர்கள் தேர்வாகும் வகையிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது. அடுத்ததாக தனியார் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளையும் தமிழக இளைஞர்களுக்கு பெற்றுக்கொடுக்க வாரந்தோறும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறது. இதன் மூலம் பல ஆயிரம் இளைஞர்கள் தனியார் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு
அடுத்ததாக சொந்த தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும் உரிய பயிற்சி வழங்கி கடனுதவிக்கான வழிகாட்டியாகவும் இருந்து வருகிறது. அடுத்ததாக வெளிநாடு சென்று வேலை பார்க்க விரும்பும் இளைஞர்களுக்காகவும் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் காலிபணியிடம் தொடர்பான அறிவிப்பையும் அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஜெர்மனி நாட்டில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புக்கான சூப்பர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஜெர்மனி மொழி பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
மாதம் 3 லட்சம் சம்பளம்
ஜெர்மனிக்கு பல்வேறு துறைகளில் 1.7 மில்லியன் திறமையான பணியாளர்கள் தேவை. மேலும் அங்குள்ள மருத்துவமனைகளில் செவிலியர்களின் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை நிகழ்வதாகவும், மேலும் அதிகரித்து வரும் சுகாதார தேவைகள் காரணமாக ஆண்டுதோறும் 35,000 செவிலியர் காலியிடங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பணியிடங்களுக்கு மாதம் 3 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக ஜெர்மன் மொழி கற்றுக்கொடுக்கும் பயிற்சியானது நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதி:
B.Sc நர்சிங் அல்லது GNM குறைந்தபட்சம் 1+ வருட அனுபவம்.
வேலை விவரம்:
செவிலியர் உதவியாளர்கள், பராமரிப்பாளர்கள்.
ஜெர்மனி மொழி கற்றுக்கொடுக்கப்படும் காலம்
B2 திறன் (8 மாதங்கள்).
இலவச படிப்பு:
இந்த படிப்பிற்கான விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 25 ஆம் தேதி
பயிற்சி தொடங்கும் காலம்
நவம்பர் 1, 2024 முதல் வாரந்தோறும் 5 நாட்கள் (8 மணிநேரம் / நாள்)
ஜெர்மனியில் வேலை செய்வதன் நன்மைகள்:
வேலை பாதுகாப்பு மற்றும் வேலையின்மை காப்பீட்டு, மகப்பேறு விடுப்பு, மருத்துவக் காப்பீடு - உடல்நலக் காப்பீடு, 5 வருட சட்டப்பூர்வ குடியுரிமை, மாதாந்திர குழந்தைகள் உதவித்தொகை, அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் இலவச கல்வி
பயிற்சி இடங்கள்:
சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை
பயிற்சி முறை: நேரடி பயிற்சி