Heavy Rain
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வங்ககக்கடலின் மத்திய மேற்கு திசையில் நிலை கொண்டிருந்த டானா புயல், நேற்று தீவிர புயலாக வலுபெற்றது. இதனிடையே தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
Heavy Rain
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று முதல் வருகின்ற 30ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும்,
School Leave
திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழைய பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Heavy Rain
இதனிடையே கனமழை பெய்யும் மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவித்துள்ளார்.