உயரும் தக்காளி விலை
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தக்காளி விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே போல பெரிய வெங்காயத்தின் விலை ஆனது ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயத்தின் விலையானது ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இஞ்சி விலை என்ன.?
கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 160 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.