தீபாவளி விடுமுறை முடிந்து ஊர் திரும்பனுமா.? ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டீர்களா.? இதோ கடைசி வாய்ப்பு

First Published Jul 4, 2024, 11:32 AM IST

தீபாவளி பண்டிகை முடிந்து அடுத்த நாள் சொந்த ஊரில் இருந்து சென்னை உள்ள வேலை பார்க்கும் இடங்களுக்கு திரும்புவதற்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது. ஆனால் குறைவான பொதுமக்களே அடுத்த நாள் திருப்புவதற்காக முன்பதிவு செய்துள்ளனர். இதனால் பெரும்பாலான ரயில்களில் இடங்கள் காலியாக உள்ளது.

தீபாவளி கொண்டாட்டம்- ரயில் முன்பதிவு

சொந்த ஊரை விட்டு படித்த படிப்பிற்காக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு வேலை செய்து வருகின்றனர். அங்கே குடும்பத்தோடு தங்கியும் விடுகின்றனர். இந்த நிலையில் விஷேச நாட்களான தீபாவளி, பொங்கல். ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற நாட்களுக்கு மட்டும் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களோடு மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடுவார்கள். அந்த வகையில், தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. 
 

தீபாவளி ரயில் முன்பதிவு

அதாவது வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை விடப்படும் என எதிர்பார்க்க்ப்படுகிறது. இதனை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை உள்ளது.

எனவே தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல லட்சக்கணக்கான மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதனையடுத்து தீபாவளி பண்டிகைக்காக ரயில்ல சொந்த ஊருக்கு செல்ல முன்பதிவு கடந்த 4 நாட்களாக நடைபெற்றது.
 

Latest Videos


காலியான டிக்கெட்டுகள்

இதில் மதுரை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் என தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், நெல்லை, பொதிகை, முத்துநகர், அனந்தபுரி, மலைக்கோட்டை உள்ளிட்ட ரயில்களிலும் கோவைக்கு செல்லும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது.

தென்மாவட்ட ரயில் - காத்திருப்போர் பட்டியல்

சென்னையில் இருந்து புறப்படும் பகல் நேர ரயில்களான வைகை, பல்லவன், குருவாயூர் ஆகிய ரயில்களிலும் டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்துவிட்டது. ஒரு சில ரயில்களில் ஏ சி பெட்டிகளில் மட்டும் சில இடமும் மற்ற ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் கூட இல்லாத அளவுக்கு முன்பதிவுகள் முடிவடைந்துள்ளது. 

தீபாவளி முடிந்து சொந்த ஊர் பயணம்

இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை முடித்து நவம்பர் 1ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு செய்ய ஏராளமானோர் காத்திருந்தனர். ஆனால் தீபாவளிக்கு அடுத்த நாளே சொந்த ஊர் திருப்ப பொதுமக்கள் பெரிய அளவில் விருப்பம் காட்டவில்லை. இதனால் ரயில்கள் காலியாக உள்ளது.

டிக்கெட் முன்பதிவு செய்ய தயாரா.?

இதனையடுத்து நாளை மற்றும் நாளை மறுதினம் சொந்த ஊரில் இருந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்ப முன்பதிவு அதிகளவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிக்கெட் கவுண்டர்கள் மட்டுமின்றி ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவு கிடைகாதவர்களுக்காக விரைவில் தீபாவளி சிறப்பு ரயில் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

click me!