- Home
- Gallery
- TASMAC Shop: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த 4 நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.!
TASMAC Shop: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த 4 நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக 4 நாட்கள் விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Vikravandi By Election
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர். இந்த தேர்தலை பிரதான எதிர்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது.
DMK Candidate
இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் பெருவரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆளுங்கட்சியான திமுக ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் அமைச்சர்களை நியமித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னை மக்களே உஷார்.. இன்று இந்த பகுதிகளில் எல்லாம் 5 மணிநேரம் மின்தடை!
PMK Candidate
அதேபோல், இந்த தேர்தலில் ஆளுங்கட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற முடிவில் பாமக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிமுக ஓட்டிகளை எப்படியாவது அள்ளி விட வேண்டும் என்பதால் பாமக, அதிமுகவுக்கு எதிரி திமுக தான் கூறி பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
TASMAC Shop
இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதியன்று நடைபெறுவதையொட்டி ஜூலை 8 முதல் 10ம் தேதி ஆகிய 3 தினங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூலை 13ம் ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்து மூடப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி கூறியுள்ளார்.