திடீரென குறைந்த தக்காளி விலை.! இரண்டு மடங்காக அதிகரித்த காய்கறிகள் விலை.! ஒரு கிலோ கேரட், பீட்ரூட் என்ன விலை.?

First Published | Jul 18, 2024, 8:51 AM IST

தக்காளியின் விலை நேற்று ஒரே நாளில் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று திடீரென சரிந்து ஒரு கிலோ 45 முதல் 55 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் மற்றி காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

உயர்ந்தது காய்கறி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் விலையானது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அந்த வகையில் பீட்ரூட் விலை ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 முதல் 50 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம்  ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Tamilnadu Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுதாம்!
 

திடீரென குறைந்த தக்காளி விலை

அதே நேரத்தில் தக்காளி விலையானது நேற்று உச்சத்தில் சென்ற நிலையில் இன்று திடீரென சரிந்துள்ளது. வரத்து அதிகரித்த காரணத்தால் ஒரு கிலோ தக்காளி விலையானது 45 முதல் 60 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

வாழைப்பூ ஒன்று 15 முதல் 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

Tap to resize

கேரட் விலை என்ன தெரியுமா.?

கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் போறீங்களா?வீக் எண்டு சுற்றுலாவா.?சிறப்பு பேருந்து அறிவிப்பு-எங்கிருந்து தெரியுமா

இஞ்சி விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!