School Leave : விடாமல் தொடரும் மழை..! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம் தெரியுமா.?

First Published Jul 18, 2024, 7:23 AM IST

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி, உதகை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கன மழையின் காரணமாக வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல நீலகிரி மாவட்டதித்ல உள்ள 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Rain school leave

காற்றழுத்த தாழ்வு பகுதி

ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளைய தினம் அதாவது  ஜூலை19ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 18ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

சென்னையில் இன்று  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33°-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° - 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Latest Videos


மலைப்பகுதியில் நிலச்சரிவு

இதனிடையே நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலை பகுதிகளில் மழை கொட்டி வருவதால் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், மற்றும் பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

School Leave

பள்ளிகளுக்கு விடுமுறை

இதே போல கோவை மாவட்டத்தில் வாழ்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

click me!