திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் போறீங்களா?வீக் எண்டு சுற்றுலாவா.?சிறப்பு பேருந்து அறிவிப்பு-எங்கிருந்து தெரியுமா

First Published | Jul 18, 2024, 8:03 AM IST

பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை கிரிவலம் செல்லவும், வார விடுமுறை சுற்றுலா செல்லவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  

சிறப்பு பேருந்து அறிவிப்பு

வார விடுமுறை மற்றும் திருவண்ணாமலை கிரிவலம்  செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம்தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், வருகிற 19/07/2024 (வெள்ளிக்கிழமை) 20/07/2024 (சனிக்கிழமை மற்றும் பௌர்ணமி)21/07/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kilambakkam

வார விடுமுறை- சிறப்பு பேருந்து

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம். ஈரோடு. திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 19/07/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 260 பேருந்துகளும், 

Train Cancelled: ரயில் பயணிகளே உஷார்.. ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 7 வரை.. ரயில்கள் ரத்து!
 

Tap to resize

கோயம்பேடு- கிளாம்பாக்கம்

20/07/2024 (சனிக்கிழமை) 585 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 19/07/2024 வெள்ளிக் கிழமை அன்று 45 பேருந்துகளும் 20/07/2024 சனிக்கிழமை அன்று 45 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர். திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tiruvannamalai

திருவண்ணாமலை கிரிவலம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 50 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 19/07/2024 அன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, மதுரை, சேலம். கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி. தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலைக்கு பேருந்து

மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 19/07/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 15 பேருந்துகளும் 20/07/2024 (சனிக்கிழமை) பௌர்ணமியை முன்னிட்டு அன்று 15 பேருந்துகளும் ஆக 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பௌர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 30 சிறப்பு பேருந்துகள் 20/07/2024 (சனிக்கிழமை) அன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

School Leave : விடாமல் தொடரும் மழை..! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம் தெரியுமா.?

சென்னை திரும்பவும் சிறப்பு பேருந்து

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,613 பயணிகளும் சனிக்கிழமை 4,354 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,142 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டுமாறு அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 

Latest Videos

click me!