ஒரு கிலோ வெங்காயம் விலை இவ்வளவா.? கிடு கிடுவென உயர்வு- எப்போ குறையும்.?

First Published | Nov 6, 2024, 11:05 AM IST

தக்காளி விலை குறைந்த நிலையில், வெங்காயத்தின் விலை உயர்ந்தே காணப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் வெங்காயம் ரூ.80 வரை விற்பனையாகிறது. 

tomato onion

தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகளின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் தங்காளி மற்றும் வெங்காயத்தின் திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்தனர். குறிப்பாக ஒரு கிலோ தக்காளி விலையானது கடந்த வாரம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வெங்காயத்தின் விலையானது 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனையானது. இந்த விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டன. அந்த வகையில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கும், வெங்காயம் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Onion Price Today

விலையை குறைக்க நடவடிக்கை

மேலும் மத்திய அரசு சார்பாக நாசிக்கிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்பப்பட்டது. சில்லரை வர்த்தகத்தில் மக்கள் கூடும் பகுதிகளில் லாரிகளில் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னைக்கு  840 மெட்ரிக் டன் வெங்காயம் ரயில் மூலம் கடந்த வாரம் அனுப்பப்பட்டது.

இருந்த போதும் வெங்காயத்தின் விலையானது தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது. அந்த வகையில் ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியது, மழையின் காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதிப்பும் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
 

Latest Videos


கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன.?

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Vegetables Price Koyembedu

ஒரு கிலோ அவரைக்காய் இவ்வளவா.?

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 20 முதல் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Vegetables Price Today

வெங்காயம் விலை எப்போது குறையும்

கொத்தவரை ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெங்காயத்தின் விளைசல் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. வருகிற ஜனவரி மாதம் முதல் புதிய வெங்காயத் விற்பனைக்கு வரும் எனவும் அப்போது வெங்காயத்தின் விலையானது குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

click me!