அரசு ஊழியர்களுக்கு எதிர்பாரா சலுகையை அள்ளிக்கொடுத்த முதலமைச்சர்.! மீண்டும் கோரிக்கை வைத்த சங்கங்கள்

Published : Apr 28, 2025, 08:13 PM IST

தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், பல்வேறு கூடுதல் பலன்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. விழா முன்பணம், கல்வி முன்பணம், திருமண முன்பணம் உயர்வு, பொங்கல் பரிசுத் தொகை உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் இதில் அடங்கும்.

PREV
15
அரசு ஊழியர்களுக்கு எதிர்பாரா சலுகையை அள்ளிக்கொடுத்த முதலமைச்சர்.! மீண்டும் கோரிக்கை வைத்த சங்கங்கள்

Government Employees Association has thanked the Chief Minister : தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அதில் முக்கியமானது. பழை ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு ஆகியவையாகும். அந்த வகையில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் இன்று தமிழக சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். 

ஈட்டிய விடுப்பிற்கான பணபலன் பெறுவதை 01.04.2026 முதல் வழங்கப்படும் என்பதை முன்தேதியிட்டு 01-10-2025 முதல் வழங்குவதாக அறிவிப்பு.

அரசு அலுவர்களுக்கு பண்டிகைக்கால விழா முன்பணம் ரூ.10,000/- இல் இருந்து ரூ. 20,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு.

25
Tamil Nadu government employees

அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள்

அரசு அலுவலர்களின் குழந்தைகள் கல்வி முன்பணம் தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சமாகவும், கலை அறிவியல்,தொழிற்நுட்ப கல்லூரியில் பயில ரூ.50,000/- ஆகவும் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு.

அரசு அலுவலர்கள்,ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் ரூ. 5 லட்சமாக உயர்வு என்ற அறிவிப்பு.

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.500 -இல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு.

ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.4,000 -இல் இருந்து ரூ.6,000/- ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு.
 

35
festival advance increase

முதலமைச்சருக்கு நன்றி

இந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத்தலைவர் த.அமிர்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நூற்றாண்டு பாரம்பரியமிக்க தமிழ்நாடு அரசு அலுவலர் வலர் ஒன்றியத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இக்கோரிக்கையை உடனே நிறைவேற்றி தந்ததோடு, 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பலன் அடையும் விதமாக நிலுவையின்றி ஜனவரி மாதத்திலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளமைக்கு மிக்க மகிழ்ச்சி.

45
Tamil Nadu government employees

மீண்டும் கோரிக்கை வைத்த சங்கங்கள்

ஒன்பது முத்தான அறிவிப்புகளை செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். தமிழக அரசின் திட்டங்களை கடைக்கோடி மக்களை சென்றடைய பாடுபடும் அரசுவ் அலுவலர்கள் இந்த அறிவிப்பிற்கு பிறகு இன்னும் கூடுதல் மகிழ்ச்சியுடன் பணிபுரிவார்கள். இவ்வறிப்புகளை செய்து எங்களது மகிழ்வித்ததுபோல பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தினை இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தினை அமல்படுத்துதல். காலிப்பணியிடங்களை நிரப்புதல், 

55
old pension scheme

முதலமைச்சர் மீது நம்பிக்கை

சரன்விடுப்பு ஒப்படைப்பிற்கான காலத்தை 01.05.2025 முதல் வழங்க வேண்டுமெனவும், 7வது ஊதியக்குழு 21 மாத நிலுவைத்தொகையை வழங்கிட வேண்டுமெனவும், மதிப்பூதியம்,தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு அவர்களை பணிநிரந்தரம் செய்து,காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் போன்ற நிலுவை கோரிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார் என் உறுதியாக நம்புகிறோம் என தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories