அமைச்சராக மீண்டும் மனோ தங்கராஜ்.! பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் ரவி

Published : Apr 28, 2025, 06:16 PM ISTUpdated : Apr 28, 2025, 06:24 PM IST

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

PREV
13
அமைச்சராக மீண்டும் மனோ தங்கராஜ்.! பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் ரவி

Mano Thangaraj takes charge as Minister :  தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 4 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 5 வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் அமைச்சர் பதவியை இழந்துள்ளார் செந்தில் பாலாஜி, இதே போல பெண்கள் தொடர்பான சர்ச்சையான கருத்தால் கட்சி பதவியை மட்டுமில்லாமல் அமைச்சர் பொறுப்பையும் பறி கொடுத்துள்ளார் பொன்முடி,

 

23
DMK cabinet reshuffle

பதவிப்பிரமாணம்  செய்து வைத்த ஆளுநர்

இதன் காரணமாக தற்போது அமைச்சர்களாக உள்ள சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சராக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி எம் எல் ஏவான மனோ தங்கராஜ் பொறுப்பேற்பு  வழங்கப்பட்டது. 
இதனையடுத்து மனோதங்கராஜ்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முதல்வர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் இன்று மாலை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்வில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது 

33
Portfolio allocation

அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு:

எஸ் முத்துசாமி – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை

ஆர் எஸ் கண்ணப்பன் – வனத்துறை மற்றும் காதி

எஸ் எஸ் சிவசங்கர் – போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்

அமைச்சராக இருந்த ஆர் எஸ் கண்ணப்பனிடம் இருந்த பால்வளத்துறை பறிக்கப்பட்டு வனத்துறை கொடுக்கப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள  மனோ தங்கராஜிற்கு மீண்டும் பால்வளத்துறை கொடுக்கபடவுள்ளது.

 

Read more Photos on
click me!

Recommended Stories