தமிழக காடுகளில் 75 நாட்களாக சுற்றி வரும் அரிசிக் கொம்பன் யானை..! உடல் நிலை எப்படி உள்ளது.? வனத்துறை தகவல்

Published : Aug 22, 2023, 10:19 AM IST

அரிகொம்பன் யானையினை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டு 75 நாட்கள் முடிவடைந்த நிலையில், தனது இரண்டாம் வசிப்பிடத்தில் ஆரோக்கியமாக காணப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.   

PREV
14
தமிழக காடுகளில் 75 நாட்களாக சுற்றி வரும் அரிசிக் கொம்பன் யானை..! உடல் நிலை எப்படி உள்ளது.? வனத்துறை தகவல்

கேரளாவில் அட்டகாசம் செய்த அரிக்கொம்பன்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சாந்தம்பாறை பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் காட்டு யானையால் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மயக்க ஊசி செலுத்தி கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்ட யானை தேக்கடி, இரவங்கலாறு, குமுளி, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்த யானை தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் புகுந்தது. இதனையடுத்து யானையை தமிழக வனத்துறையினர் மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனையடுத்து நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதிக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட அரிசிக் கொம்பன், 

24
arikomban

இரண்டு முறை பிடிபட்ட அரிக்கொம்பன்

அங்கிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் அப்பர் கோதையாறு முத்துக்குளி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. இதனையடுத்து யானை புதிய வாழ்விடத்தில் எப்படி வாழும் என விலங்கின ஆர்வலர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் யானையின் உடல் நிலை மெலிந்து விட்டதாகவும் புகைப்பட வெளியானது. ஆனால் இதனை மறுத்த வனத்துறை யானை நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் யானை தமிழக காட்டுப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டு 75 நாட்களை கடந்துள்ள நிலையில் யானையின் உடல் நிலை தொடர்பாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் வனத்துறை வெளியிட்ட அறிக்கையில், 

34
Arikomban

அரிக்கொம்பன் உடல் நிலை

அரிக்கொம்பன் யானை, தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், மேல்கோதையாறு வனச்சரகத்திற்குட்பட்ட குட்டியார் அணை அருகே அடர்ந்த வனப்பகுதியில் 06.06.2023 அன்று விடப்பட்டது.  அரிக்கொம்பன் யானையானது நிபுணர் குழுவின் தொடர் கண்கானிப்பில் உள்ளது. கடந்த  19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய தினங்களில் களக்காடு கோட்டத்தின் துணை இயக்குநர், சூழலியலாளர் மற்றும் முன் கள பணியாளர்கள் குழுவினருடன் மேல்கோதையாறு பகுதியில் யானையை கண்காணித்தனர். 

44

புதிய வாழ்விடத்தில் அரிக்கொம்பன்

யானையானது சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை கண்டறிந்தனர். மேலும், உணவு மற்றும் தண்ணீர் நன்றாக உட்கொள்வதை நிபுணர் குழு கண்டறிந்தனர். மேலும் ரேடியோ காலரில் இருந்து பெறப்படும் சிக்னல் மூலம் யானையின் நடமாட்டம் தொடர்ந்து களப்பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரிக்கொம்பன் இருக்கும் இடத்தில் பிற யானைக்கூட்டங்கள் சுற்றித்திரிவது கண்டறியப்பட்டது. அரிகொம்பன் யானையினை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டு 75 நாட்கள் முடிவடைந்த நிலையில், தனது இரண்டாம் வசிப்பிடத்தில் ஆரோக்கியமாக காணப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

TN Rain Alert: குடை இல்லாமல் வெளியே போகாதீங்க! இந்த 10 மாவட்டங்களில் 3 மணிநேரத்தில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
 

click me!

Recommended Stories