பொங்கல் பண்டிகை தினத்தில் தேர்வா.! இறங்கி அடித்த கட்சிகள்- பின்வாங்கிய மத்திய அரசு

First Published | Nov 26, 2024, 12:11 PM IST

2025 ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் திருநாளில் நடைபெறவிருந்த CA தேர்வு, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து ஜனவரி 12, 16, 18, 20 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தமிழக மக்களின் கலாச்சார உணர்வுகளை மதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

EXAM

சிஏ தேர்வு தேதி அறிவிப்பு

சி.ஏ எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வு இந்தியா முழுவதும் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என  இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவித்தது.  இந்தநிலையில் ஜனவரி 14ஆம் தேதி தமிழகத்தில் முக்கிய பண்டிகையான பொங்கல் கொண்டாடப்படவுள்ளது.

பொங்கல் தினத்தில் தேர்வுகள் நடத்துவதா என கேள்வி எழுந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளும்ன்ற் உறுப்பினர் சுப.வெங்கடேஷன் வெளியிட்டிருந்த பதிவில், பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை.  அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை.  ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று.  தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு என கேட்டுக்கொண்டார்

su venkatesan

மேலும்   தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 அறுவடைத் திருநாளான" பொங்கல் திருவிழா என்பது  தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்.

Tap to resize

ca exam

மத்திய அரசு தலையிடுவதில்லை

இது தொடர்பாக ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வால் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.  இதனையடுத்து இந்த பிரச்சனை தொடர்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்பியது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கூறுகையில், மொழி பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பிரச்சாரமாக கொண்டு வருவதாக விமர்சித்தவர்,தேர்வு ஆணையத்தின் முடிவுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை என கூறியிருந்தார்.

CA OFFICE

தேர்வு தேதி மாற்றம்

இந்தநிலையில் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சி.ஏ  தேர்வு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 12, 16, 18,20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது. 

KANIMOZHI

வருத்தம் அளிகிறது- கனிமொழி

இது தொடர்பாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், தமிழகமும், திமுகவும் எப்போதும் நமது மக்களின் பிரச்சனைகளுக்காகவே நிற்பதாக தெரிவித்துள்ளார்.  நமது இதயங்களுக்கு நெருக்கமான பண்டிகையான பொங்கல் தினத்தன்று CA தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது, திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்தேன். தற்போது இந்த தேர்வானது 14ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதிக்கு தேதி மாற்றப்பட்டிருப்பது நிம்மதியாக இருந்தாலும், நமது கலாச்சார விஷயங்களில் மத்திய அரசு திரும்பத் திரும்ப கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார். 

Latest Videos

click me!