இதெல்லாம் மானம் கெட்ட பிழைப்பு! அன்புமணி வாய் திறந்தா என்ன நடக்கும் தெரியுமா? ராமதாஸ்க்கு எதிராக கொதித்த தங்கர் பச்சான்!

Published : Aug 07, 2025, 09:13 AM IST

பாமகவில் தந்தை மகன் இடையே அதிகார மோதல் உச்சத்தை எட்ட, அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் அமைதி காப்பது மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கர் பச்சான், அன்புமணியின் மௌனம் தந்தை மீதான மதிப்பின் வெளிப்பாடு என்கிறார்.

PREV
14

பாமகவில் தந்தை மகனுக்கும் இடையேயான அதிகார மோதல் உச்சம் பெற்றுள்ளது. இதனால் இருவரும் தனித்தனி அணியாக செயல்படுவது மட்டுமல்லாமல் அன்புமணியின் ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும் புதிய நிர்வாகிகளை நியமித்தும் வந்தார். ஆனால் அன்புமணி அவரவர் வகித்து வந்த பதவிலேயே தொடர்வதாக அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் யாரோ தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி வைத்து இருப்பதாக கூறி ராமதாஸ் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் WI-FI மூலம் அவரது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகவும் இதுகுறித்து டிஎஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

24

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறார் என்றால் அது அன்புமணியாகத்தான் இருக்கும் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் கட்சிக்குள் தங்களது பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருவரும் போட்டி போட்டு பாமக பொதுக்குழுவை கூட்டியுள்ளனர். இதனிடையே அன்புமணி பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மகன் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் ராமதாஸ் குறித்து எந்தவித விளக்கத்தையும் விமர்சனத்தையும் முன்வைக்காமல் அன்புமணி அமைதி காத்து வருகிறார்.

34

இந்நிலையில் தந்தையின் மீதான மதிப்பு வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே மகன் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதிலுரை கூறாமல் அமைதி காக்கிறார் என தங்கர் பச்சான் கூறியுள்ளார். இதுதொடர்பாக இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை போல் மகனும் தந்தை மீது குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? தந்தையின் மீதான மதிப்பு வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே மகன் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் பதிலுரை கூறாமல் அமைதி காக்கிறார் எனும் பெருந்தன்மை இப்பொழுது புரியாமல் போகலாம். கடந்த காலங்களில் பொறாமையினாலும் வயிற்றெரிச்சலினாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது வன்மத்தை ஊடகங்களில் கக்கி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்கள் யார் யார் என்பது இம்மக்களுக்கு புரியும்.

44

சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த ஓநாய்கள் எல்லாம் இப்போது ஐயாவை புகழ்வது போல் புகழ்ந்து கட்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் மக்கள் நன்கு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். புறணிப்பேசி வயிறு வளர்க்கும் இத்தகைய சமூக வலைத்தளப் போராளிகளின் மானம் கெட்ட பிழைப்பு நெடுநாள் நடக்காது என்பதை காலம் விரைவில் உணர்த்தும்! காத்திருங்கள்! என தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories